வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் அத்துமீறி நுழைந்த பெண் அதிகாரி - 3 ஊழியர்கள் இடை நீக்கம்

Home

shadow

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறையில் பெண் அதிகாரி ஒருவர் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் மேலும் 3 ஊழியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


மதுரை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வட்டாட்சியர் சம்பூர்ணம் என்பவர், அத்துமீறி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மதுரை ஆட்சியர் நடராஜன், வட்டாட்சியர் சம்பூர்ணத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான குருசந்திரனிடம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


இது தொடர்பான செய்திகள் :