வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா - மக்களவையில் அறிமுகம்

Home

shadow

உலகளவில் மதிப்பீடும்போது சமீப காலத்தில் இந்தியாவில்  வாடகைத்தாய் முறை அதிகரித்துள்ளது. பொதுவாக குழந்தை இல்லாத தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் வாடகைத்தாய் முறை தற்போது வர்த்தகரீதியாக பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு மக்களவையில் ஒழுங்குபடுத்தப்பட்ட வாடகைத்தாய் முறை மசோதா 2019-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவில்  வாடகைத்தாயாக இருக்க பல விதிமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு பெண் ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்கவேண்டும், குழந்தையின் தாய்க்கு அவர் உறவினராக இருக்க வேண்டும், வாடகைத்தாயாக  இருக்கும் பெண் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும், மேலும் அப்பெண்னுக்கு  ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்க வேண்டும். இந்த மசோதாவை நிறைவேற்ற தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பான செய்திகள் :