விருதுநகர், ராமேஸ்வரம் சாரல் மழை, படகு நிறுத்தம்

Home

shadow


இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோடைக் காலம் ஆரம்பிக்கும் முன்னரே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று  கன்னியாகுமரி, திருநெல்வேலிதூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.  விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த சாரல் மழையின் காரணமாக அங்கு குளிர்ந்த தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. இதேபோல் கொடைக்கானலில் அதிகாலை முதலே  பலத்த காற்றுடன்  மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்   இதனிடையே காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 1800 க்கும் மேற்பட்ட படகுகள் நான்காவது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :