விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் 40 லட்சம்

Home

shadow

 

         விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் 40 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்ததாக இந்து சமய அறிநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவத்தின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காணிக்கை செலுத்தினர். இதன்படி இந்த மாத உண்டியல் காணிக்கை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் பிரகாஷ் தலைமையில், விழுப்புரம் அறங்காவலர் குழு தலைவர் கணேசன் பூசாரி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 40 லட்சத்து 447 ரூபாயும், 151 கிராம் தங்க நகைகளும், 335 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தன.

இது தொடர்பான செய்திகள் :