வெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..

Home

shadow

காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் எழும்பூர் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் சோதனை செய்தனர். விசாரணையில், அவை வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

இது தொடர்பான செய்திகள் :