வேதாரண்யம் - பொதுமக்கள் போராட்டம்

Home

shadow


வேதாரண்யம் சன்னதி கடற்கரை சாலையில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவு நீரை கடற்கரைக்கு செல்லும் சாலையோரத்தில் தினந்தோறும் 40 லாரிகளுக்கு மேல் குப்பைகளும், 20 டேங்கர் லாரிகளில் கழிவு நீரும் கொட்டப்படுகிறது. இதனால் கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களும், கடலுக்கு புனித நீராடச் செல்லும் பக்தர்களும் குப்பை கிடங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பாதிப்பு மற்றும் உடல் நலக்குறைவு ஏற்படும் என அஞ்சுகின்றனர். இந்நிலையில், சன்னதி சாலையில் உள்ள குப்பைக் கிடங்கை நிரந்தரமாக அகற்றக் கோரி, குப்பை ஏற்றி வந்த நகராட்சி லாரி மற்றும் கழிவு நீர் டேங்கர் லாரி முன் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :