வேலூர் தொகுதி - ஜெகத்ரட்சகனிடம் ஒப்படைப்பு

Home

shadow

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக அணி சார்பாக ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகிறார்கள். இருவரும் வெற்றி பெறுவதற்காக கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பணப்பரிமாற்றமும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பாக சுமார் 80 எம்எல்ஏக்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதிமுக சார்பில் அமைச்சர்கள் பலரும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பாளராக திமுக எம்பி ஜெகத்ரட்சகனை திமுக தலைவர் ஸ்டாலின் நியமித்திருக்கிறார். அவர் கடுமையாக பணியாற்றுவர், நல்ல செலவும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பான செய்திகள் :