வேலூர் மக்களவைத் தேர்தல் – ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்

Home

shadow

                 வேலூர் மக்களவைத் தேர்தல் – ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்

                 வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக தனித்து அமோக வெற்றி பெற்றது. வேலூர் மக்களவைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டார்.

இந்த நிலையில், மார்ச் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் கதிர் ஆனந்த் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணம், கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வேலூர் மக்களவைத் தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இந்த நிலையில், ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று அதிமுக கூட்டணி சார்பில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் , மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான சண்முக சுந்தரத்திடம் அவரது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இது தொடர்பான செய்திகள் :