வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படவுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

Home

shadow

        நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படவுள்ளதாக சுதந்திரதின உரையில் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இந்திய நாட்டின் 73ஆவது சுதந்திரதினம்  நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார் .  இதில் தலைமை செயலர் சண்முகம் , அமைச்சர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.   தமிழக மக்களுக்கு தனது  சுந்ததிரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் பழ்னிச்சாமி,  நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படவுள்ளதாகவும் வேலூர், திருப்பத்தூர் , ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளை தலைமை இடமாக கொண்டு மாவட்டங்கள் பிரிக்கப்படும் என தெரிவித்தார்.  சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 15ஆயிரம் ரூபாயில்  இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்த அவர் சுதந்திர போராட்ட வீரர்களில் வாரிசுகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையும் 7ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 8ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நன்மை பயக்கும் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படும் எனவும் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் அரசு அனுமதிக்காது என தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர்  கோதாவரி காவிரி இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும் எனவும் காவிரி ஆற்றை சீரமைக்க நடந்தாய் வாழி என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில்  சிறப்பாக பணியாற்றிய  அதிகாரிகளுக்கு தமிழக அரசின் விருது வழங்கி முதலமைச்சர் கெளரவித்தார். இதில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் விருது இஸ்ரோ தலைவர் சிவனுக்கும் , கல்பனா சாவ்லா விருது மீன் வளத்துறை துணை இயக்குனர் ரம்யா லட்சுமிக்கு வழங்கப்பட்டது. மேலும்   கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதிக்கு அதீத துணிச்சலுக்கான விருதும்  சிறந்த மருத்துவருக்கான விருது  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமாதேவிக்கு வழங்கப்பட்டது. இதேபோல் சென்னை வேப்பேரியில் செல்பட்டுவரும்  அறிவுசார் குழந்தைகளுக்கான ஆப்பர்சுனிட்டி  பள்ளிக்கு சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது. இதனை அந்நிறுவனத்தின் கஸ்தூரி தேவராஜ் பெற்றுக்கொண்டார்.  மேலும் சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராசிகான விருதும் தர்மபுரி நகரடாச்சிக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டன.  

இது தொடர்பான செய்திகள் :