வேலூர் - 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

Home

shadow

 

        வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கொணவட்டம் அருகேயுள்ள மேல்மொனவூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது அவ்வழியாக இக்மால் என்பவர் தனது காரில் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்றார். அதனை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வேலூர் பகுதியில் காலை இரண்டு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தற்போது ஐந்து லட்சம் ரொக்கப்பணத்தை வாகன தனிக்கையில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :