வைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

Home

shadow

                 மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

வைகோ இத்தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தார். இன்று இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் வைகோவை கண்டித்து இனிவரும் காலங்களில் நாட்டின் பொதுநலம் கருதி பேசவேண்டும் எனவும், பேசுவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேச வேண்டும் என்றும் கூறினர். மேலும் இவ்வழக்கின் மேல்முறையீடு மனு தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல் ஆணையர் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் விசாரணை முடியும் வரையில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தினர்.  

இது தொடர்பான செய்திகள் :