1.27 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளதாக முதியவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்

Home

shadow

குடும்ப சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட முதியவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்

அதில் குடியாத்தம் அருகேயுள்ள வேப்பூர் ஊராட்சியில் தனக்கு சொந்தமான 1.27 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நியாயம் கேட்க சென்ற போது, மோசடி செய்த நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். நிலத்தை அபகரித்தவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :