10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை - பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது

Home

shadow

              10,11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை கடந்த மூன்று ஆண்டுகளாக பொது தேர்வுக்கு முன்னதாகவே தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.  இதன்படி இவ்வருடம் 2019-2020க்கான 10, 11 மற்றும்  12 பொது தேர்வு அட்டவணைகளை இன்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 
12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி துவங்கி, மார்ச் 24ம் தேதி நிறைவடைகின்றன. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியிடப்படும்.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4ம் தேதி துவங்கி, மார்ச் 26ம் தேதி நிறைவடைகின்றன. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும்.  
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 17 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 9 ம் தேதி நிறைவடைகின்றன. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 4 ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :