110 விதியின் கீழான அறிவிப்பு

Home

shadow

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பாசியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் இன்று 110- விதியின் கீழ், அவர் பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி மாற்றுத் திறனாளிகள் ஆவின் நிறுவன பால் உற்பத்திப் பொருள் விற்பனை மையம் அமைக்க செலுத்த வேண்டிய 25 ஆயிரம் ரூபாயை, அரசு மானியமாக வழங்கும் என்று கூறினார். மனவளர்ச்சி குன்றியோர், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் சிறப்பாசியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 14 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். திருச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் தொழில் பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு உருவாக்க திட்டம், பல்வேறு மாவட்டங்களில் நீதிமன்ற கட்டுமானப் பணிகள், சிறைத்துறை அதிகாரிகளுக்கு குடியிருப்பு, சென்னை புழல், மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை மத்திய சிறைகள் மற்றும் பெண்களுக்கான தனிச்சிறைகளில் செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள், 110 விதியின் கீழான அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.

 

இது தொடர்பான செய்திகள் :