19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டிற்கு தடை

Home

shadow


நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்த அறிவிப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டிற்கு தடை  விதிக்கப்பட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நீலகிரி மாவட்ட அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரியில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 35 ஊராட்சிகளில் 19 வகையான  பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்  கப்புகள், ஸ்டிரா, சில்வர் பூச்சுக் கொண்ட பைகள், ஸ்டைலாபோர்ம் மற்றும் தெர்மாகோல் தட்டுகள் உள்ளிட்ட 19 வகை பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடையை மீறும்  சில்லறை விற்பனையாளர்களுக்கு, அரை கிலோ பிளாஸ்டிக் பொருளுக்கு ஆயிரம் ரூபாய் வீதமும்மொத்த விற்பனையாளர்களுக்கு  5 ஆயிரம் ரூபாய் வீதமும்திருமண மண்டபங்களுக்கு  20,000 ரூபாயும்  அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான செய்திகள் :