2ஜி கடந்து வந்த பாதை

Home

shadow

மத்தியில், காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, 2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரை, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ஆ. ராசா இருந்தார்.அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை தெரிவித்தது. இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சி ஏ ஜி அறிக்கை தெரிவித்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது. இந்த வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. வழக்கு தொடர்பாக அதிக ஆவணங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால், தீர்ப்பு தேதி ஒத்திவைக் கப்படுவதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார். ஆனால் தீர்ப்பு வழங்கும் தேதியை அறிவிப்பதிலேயே பெரும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தீர்ப்பு வழங்குவது தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பகுரா, ராஜாவின் முன்னாள் உதவியாளர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் - அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளான, கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீதும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், 'டிவி'க்கு அளித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. அதில், ராசா, கனிமொழியுடன், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான செய்திகள் :