2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

Home

shadow

                        தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பழனிசெட்டிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தலைமையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில்,  அரசுத் துறைகள் சார்பில் 702 பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம்,  37 மகளிர் சுயஉதவிக் குழுக்கள், 5 சுயஉதவிக் குழு கூட்டமைப்புகளுக்கு சுழல் நிதி,  177 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா   துணை முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் வழங்கினர்.பின்னர் பேசிய துணை முதலமைச்சர் தமிழகத்தில் குடிசை வீடுகளே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதற்காக, ஏழை குடும்பங்களுக்காக மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ளதாகவும். இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடித்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் 2023-ஆம் ஆண்டிற்குள் குடிசை வீடுகளில் வசிக்கும் அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :