5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

Home

shadow

                 திருக்கழுக்குன்றத்தில் பத்திரப் பதிவுக்கு 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கழுக்குன்றம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனது ஆயிரத்து 600 சதுர அடி மனையை பத்திரப் பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு, சார் பதிவாளர் பொன் பாண்டியன் என்பவர் பத்திரப் பதிவுக்கு 40 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதையடுத்து, 40 ஆயிரத்தை கொடுத்தபோது தனக்கு மேலும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் பத்திரவுப் பதிவு செய்ய முடியும் என்று பொன் பாண்டியன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தார்.  புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை , மூர்த்தியிடம் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பினர். மூர்த்தி சார்பதிவாளர் பொன்பாண்டியனிடம் 5 ஆயிரம் ரூபாயை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்

இது தொடர்பான செய்திகள் :