7 நாட்கள் நடைபெறும் வேம்பாட்டி மார்கழி உற்சவம் சென்னையில் உள்ள குச்சிபுடி கலை அரங்கத்தில் நேற்று தொடங்கியது.

Home

shadow

தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா கலை பண்பாட்டு துறை சார்பில் வேம்பாட்டி மார்கழி உற்சவம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குச்சிப்புடி கலை அரங்கத்தில் தொடங்கியது. 7 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் பரதம், குச்சிபுடி, கதகளி, ஒடிசி, மோகினியாட்டம் உள்ளிட்ட பல நடனக் கலைகள், பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட உள்ளன. நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, ஸ்ரீ கிருஷ்ண பாரிஜாதம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

குச்சிபுடி நடன கலைஞர்களின் நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை பலர் கண்டு ரசித்தனர். பல நாட்டிய கலைஞர்கள் தங்கள் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசத்துக்கு உள்ளாகினர்.  

முன்னதாக கலை அரங்க வாயிலில் வைக்கப்பட்டுள்ள குச்சிபுடி கலையின் தந்தையாக கருதப்படும் ஸ்ரீ சித்தேந்திர யோகி அவர்களது 7 அடி உயர திருவுருவ வெண்கல சிலையை துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வம் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பான செய்திகள் :