ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை

Home

shadow

                          ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி இன்டெநெட் சேவை வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்ததது. இதனையடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் மற்றும் இணைய சேவைகள், கடந்த 5 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தடைகள் விலக்கப்பட்ட இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகு ரேசி, ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் 5 மாவட்டங்களில் மீண்டும் செல்போன் மற்றும் 2ஜி இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது. அங்கு அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :