அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளை இன்று ஃபுளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து

Home

shadow


     அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளை இன்று ஃபுளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஒன்றரை லட்சம் மக்கள் இருளில் தவிக்கின்றனர்.

அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து, 3 மாகாணங்களிலும் கடலோரப் பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த பதற்றமான சூழ்நிலையில், வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியது. கடலோர பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இருளில் தவித்து வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :