இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார் தமிழக தங்க மங்கை கோமதி மாரிமுத்து
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது . இதில் பெண்களுக்கனான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து இரண்டு நிமிடம் 2.70 வினாடிகளில் எல்லைக்கோட்டை கடந்து முதலிடம் பிடித்து இந்தியாவிற்கு முதல் ஆசிய தடகள போட்டிக்கான தங்கத்தை பெற்று தந்தார் . சீன வீராங்கனை வெள்ளி பதக்கமும் கஜகஸ்தான் வீராங்கனை வெங்கலப் பதக்கமும் வென்றார்.