பொள்ளாச்சி – உருமி முழங்க சலங்கை மாடு தேவராட்டம்

Home

shadow


        பொள்ளாச்சியில் பொங்கலை வரவேற்கும் வகையில் உருமி முழங்க சலங்கை மாடு, தேவராட்டம் நடைபெற்றது.

தமிழர் திருநாளான தை பொங்கல் நாளை வரவேற்கும் வகையில் பொள்ளாச்சியில் பல்வேறு கிராமங்களில் உருமி சப்தம் முழக்க பாரம்பரிய ஆட்டங்களில் கிராம மக்கள் இரவு நேரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடி கிராமத்தில் மக்கள் பொங்கலை வரவேற்கும் விதமாக சலங்கை மாடு விளையாட்டில் ஈடுபட்டனர். காளை மாட்டிற்கு முன்பு நீள கம்பு வைத்தபடி உருமி சத்ததிற்கு ஏற்ப கிராம மக்கள் நடனமாட அதற்கு தகுந்தப்பு களை மாடு அசைத்து செல்வது கிராம மக்களை உற்சாகத்தை ஏற்படுத்தினர். மேலும் சாதி, மத பேதமின்றி கிராமத்தை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வண்ண உடைகள் அணிந்து உருமி முழக்க தேவராட்டம் ஆடினர்.

இது தொடர்பான செய்திகள் :