ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி

Home

shadow


       ஆசிய கால்பந்து  ஆட்டத்தில் ஐக்கிய அரபு  அமீரக நாடுகள் அணியிடம் 2 க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

24 நாடுகள் பங்கேற்றுள்ள  ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியாவும் ஐக்கிய அரபு நாடுகளும் மோதின.  இதில்  முதல் ஆட்டத்தில் 4 க்கு 1 என தாய்லாந்தை வென்ற உற்சாகத்தோடு இந்திய அணி களமிறங்கியது.  இதில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டனர்.  இந்த ஆட்டத்தின்  41 ஆவது நிமிடத்தில்  கல்பான் முபாரக் முதல் கோலை அடித்தார். இதனையடுத்து 88 ஆவது நிமிடத்தில் அலி அகமது மப்கௌட் 2-ஆவது  கோலை அடித்தார். இறுதியில் 2  க்கு 0 என்ற கோல் கணக்கில் அமீரக நாடுகள் அணி இந்தியாவை வீழ்த்தியது.

இது தொடர்பான செய்திகள் :