கத்தாரில் கலக்கும் இந்திய வீரர்கள்: தங்கம் வென்ற தமிழ்நாட்டின் தங்க மங்கை

Home

shadow

23 வது ஆசிய உலக சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹவில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் பெருமையை தேடி தந்துள்ளார். ஏழ்மை விவசாய குடும்பத்தில் பிறந்த கோமதி மாரிமுத்து, 20 வயது முதலே பயிற்சி மேற்கொண்டார். அவரது கடின உழைப்பு விடாமுயற்சியால்  2017 ஆம் ஆண்டு புனேவில் நடந்த ஆசிய போட்டியில் 7 ஆம் இடம் பிடித்தார்.அதன்பின் 2015 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4 ஆம் இடம் பிடித்தார். தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பந்தய இலக்கை 2 நிமிடம் 2.70 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார் நம் தமிழக தங்க மங்கை கோமதி மாரிமுத்து. இந்திய வீரர்கள் தங்கள் துறையில் பதக்கங்கள் பெற்று நம் தேசத்துக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.வீரர்களின் பதக்கப்பட்டியல் பின்வருமாறு 

கோமதி மாரிமுத்து (800மீ ) - தங்கம்
தஜிந்தர்சிங்(குண்டு எறிதல்) - தங்கம்   
எம் .பி .ஜபிர் (400மீ )-வெண்கலம் 
சரிதாபென் காயாக்வாட் (100மீ தடை ஓட்டம் ) - வெண்கலம் 
ஷிவ்பால் சிங்க்(ஈட்டி எறிதல் ) - வெள்ளி 

இது தொடர்பான செய்திகள் :