கரூர் அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வர் ஆலயத்தில் திருத்தேர் விழா

Home

shadow

  

          பங்குனி உத்திரபெருந்திருவிழாவை முன்னிட்டு கரூர் அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வர் ஆலயத்தில் திருத்தேர் விழா வெக விமரிசையாக நடைபெற்றது.

கொங்கு ஏழு ஸ்தலங்களில் முதல்தலமாக விளங்கி வருவது அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வர் ஆலயம். இங்கு சுயம்பு மூர்த்தியாக சுவாமி பக்தர்களுக்க அருள்பாலித்து வருகிறார். பங்குனி மாதம் துவங்கியதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா துவங்கி நாள் தோறும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்க காட்சியளித்து வருகிறார். மாலை நேரங்களில் உற்சவ மூர்த்தி அலங்காரவல்லி, சௌந்திரநாயகியுடன் ஆலயத்தை சுற்றி பக்தர்களுக்கு நான்கு மாடவீதிகளில் காட்சியளித்து வந்தார். விழாவில் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆலயத்தில் ஆநிலையப்பர் ஆலங்காரவல்லி, சௌந்திராயகியுடன் அருள்பாலித்தார், ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆலயத்திலிருந்து சிவாச்சாரியர்கள் சுவாமியை ஊர்வலமாக அழைத்து வந்து திருத்தேரில் வைத்து அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஆலயத்தை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் தேர் வலம் வந்து  புறப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. திருத்தேர் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நமச்சிவாயா என்று கூறிகொண்டே தேரை வடம் பிடித்து இழுந்தனர். சிவனடியார்களின் சிவவாத்தியம் முழுங்க திருத்தேர் வடம் படிக்கப்பட்டது. ஆலயத்தின் அருகேயுள்ள பல்வேறு ஆன்மிக  அன்பர்கள் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்க அன்னதானம் வழங்கினர்.

இது தொடர்பான செய்திகள் :