காரைக்காலில் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கொள்ளையர்கள் கைது

Home

shadow

                    காரைக்காலில் வீடு புகுந்து கொள்ளை அடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து  கைது செய்தனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம்  காரைக்காலை அடுத்த பூவம் நண்டலாறு எல்லைப்பகுதியில் கோட்டுச்சேரி போலீசார் நேற்று  மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது நண்டலாற்றங்கரை ஓரமாக உள்ள சுனாமி நினைவு மண்டபத்தில் சந்தேகத்திற்கிடமாக 5 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் கோட்டுச்சேரி பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த கும்பலைக் சுற்றி வளைத்ததுஅப்போது கொள்ளையர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். போலீசார் 2 பேரை கைது செய்த நிலையில் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :