கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளன

Home

shadow

                                                                                                     கோவை மாவட்டம்  வெள்ளலூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் எரிந்து வரும் தீயை அணைக்க விமானப்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளன 
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு கொட்டப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில் பல ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான குப்பைகள் எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து.  தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால்  எரிந்து வரும் தீயை அணைக்க சூலூர் விமான படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இதேபோல் வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றியது. மள மளவென பரவிய தீ குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் கடும் புகை மூட்டம் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்,. மேலும் புகைமூட்ட்த்தால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து புகார் அளித்து நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :