சர்ச்சை ஏற்படுத்திய பிரதமர் இம்ரான் கான்

Home

shadow

பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஈரான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபர் ரூஹானியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் ஈரான் மிகவும் பாதிக்கப்படுவதை தான் அறிந்துள்ளதாகவும், பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதை ஈரானும், பாகிஸ்தானும் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். தனது நாட்டில் பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதாக அந்நாட்டு பிரதமரே தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏறொடுத்தியுள்ளது. இம்ரான் கானின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இம்ரான் கான் செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :