சாலைகள் உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை

Home

shadow

                                                                              தமிழகத்தில் வனங்கள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பொது இடங்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கடந்த 2017-ஆம் ஆண்டு யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில், நெடுஞ்சாலை அரசியல் விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் தவறிவிட்டது என்றும்,  இதுபோன்ற விளம்பரங்கள் மேம்பாலங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புகள், பாறைகள் போன்றவற்றில் செய்யப்படுகின்றன. எனவும், குறிப்பாக, இவற்றில் 90 சதவீத விளம்பரங்கள் அரசியல் கட்சிகளால் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்திருந்தார். மேலும்,  இது தொடர்பாக சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஆய்வு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அதிகாரிகள் பின்பற்றவில்லை. என குற்றம் சாட்டிய அவர்,சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கவும், . இது தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம் மத்திய வனம், சுற்றுச்சூழல், தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோரும் தமிழகத்தில் உள்ள 17 அரசியல் கட்சிகளும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.  இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தலைமையிலான அமர்வில் இன்றுவிசாரணைக்கு வந்தது.  அப்போது, பாறைகள், மலைகள், குன்றுகள், பொதுக் கட்டடங்கள் ஆகியவற்றின் அழகை கெடுக்கும் அல்லது உருக்குலையச் செய்யும் வகையில் வரையப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் உருவப் படங்களுடன்கூடிய அரசியல் சார்ந்த விளம்பரங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு 2 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் மலைகள், சாலைகள், வனங்களில் அரசியல் விளம்பரங்கள் வைக்கவும்  தடை விதித்து உத்தரவிட்டது.
தினகரன் நாளிதழ் – உயர் நீதிமன்ற மதுரை கிளை (ஏவி)
மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக கருத்து கணிப்பு வெளியிட்டதற்காக மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அங்கு பணியாற்றிய 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில், அட்டாக்பாண்டி உள்பட 9 பேருக்கு தலா  3  ஆயுள் தண்டனை விதித்து கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்பளித்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் மார்ச் 25 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் . அப்போது அவருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :