சிரியா - அமெரிக்கா கூட்டணியின் வான்வழி தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு

Home

shadow


 

      சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

 

சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. இந்த நிலையில், நாட்டின் கிழக்கே டெயிர் அல்-ஜோர் பகுதியில் பேக்கோஜ் நகரில் 20 ஆயிரம் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.  இதனை அடுத்து மீதமுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  இதேபோன்று குடிபெயர்ந்த பொதுமக்கள் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :