சென்னை – இந்த மாதத்துக்குள் ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

Home

shadow


         இந்த மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்குகளில் தலா 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் இன்று சட்டபேரவையில் அறிவித்துள்ளார். கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால் பாதிக்கப்பட்ட, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழஙப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்குகளில் தலா 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :