டெல்லி - புதிய பதவியை ஏற்க மறுத்து ராஜிநாமா செய்தார் அலோக் வர்மா

Home

shadow


         மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் மீண்டும் சி.பி.. இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மாவின் பதவியை பிரதமர் மோடி தலைமையிலான குழு நேற்று பறித்தது. இடைக்கால சி.பி.. இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார்இதுதொடர்பாக அவர் மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இன்றோடு தன்னுடைய பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுமாறும்,. தீயணைப்புத்துறை இயக்குநர் பணிக்கான வயது வரம்பை தான் முன்னரே கடந்துவிட்டதால் மீண்டும் அந்தப் பணிக்கு செல்வது ஏற்புடையதல்ல எனவும் அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :