தடைகளை தாண்டி கர்நாடக எல்லை சென்ற கோதண்டராமர் சிலை

Home

shadow

         தடைகளை தாண்டி கார்நாடக எல்லை சென்ற கோதண்டராமர் சிலை 

         கடந்த 12 நாட்களாக ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை பல்வேறு தடைகளை தாண்டி தற்போது கர்நாடக எல்லையை சென்றடைந்தது. 

         திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவுக்கு உட்பட்ட கொரக்கோட்டை கிராமத்தில் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட 350 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலை 7 மாத பயணத்திற்கு பின் ஓசூர் வந்தடைந்தது. இந்த சிலை பேரண்டபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கான்கிரீட் பாலத்தின் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கோதண்டராமர் சிலை பெங்களூரு நோக்கி சென்றது. 

          இன்று காலை தமிழக எல்லையான ஜுஜுவாடியை கடந்து கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியை கடந்தது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கோதண்டராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :