தமிழகம், புதுச்சேரியில் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது

Home

shadow

                           தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் அதிமுக கட்சி, பாரதியஜனதா, பாட்டாளிமக்கள்கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. இதேபோல் டிடிவிதினகரனின் அமமுக கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போன்றவையும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் தமிழகத்தில் 4 முனைபோட்டி நிலவுகிறது. வரும் 18-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரவாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :