நயம் அறக்கட்டளை சார்பில் கொடிசியா வளாகத்தில் 3 நாட்கள் பொங்கல் விழா

Home

shadow

              நயம் அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா, தமிழர் திருவிழாவாக கோவை, கொடிசியா வளாகத்தில் 3 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய "நயம் அறக்கட்டளையின் " இணை ஒருங்கிணைப்பாளர் அருள்மர்கிரேட்கிளிரா, பண்டையத் தமிழர்களின் வீரத்தையும், விவேகத்தையும்பறைசாற்றும் வகையில் பொங்கல் விழா, தமிழர் திருவிழாவாக  3  நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் கொண்டாடப்படவுள்ளதாக கூறினார். இதில் சடுகுடு, உறியடித்தல், வழுக்குமரம், இளவட்டக் கல், சிலம்பம், மல்யுத்தம், பம்பரம், கயிறு இழுத்தல், கர்லா சுத்துதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாக கூறிய அவர், கரகாட்டம், ஒயிலாட்டம், பறை, மள்ளர் கம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், கால்நடை கண்காட்சியும் நடைப்பெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பேச்சுப் போட்டி, ஒவியப்போட்டி, கோலப் போட்டி, பட்டம் விடுதல், பொம்மலாட்டம் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைப்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்

இது தொடர்பான செய்திகள் :