நாடு பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

Home

shadow

 

        நாடு பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என முதலமைச்சர்  பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சேலம் கொண்டலாம்பட்டியில் இன்று நடைபெற்றதுஇதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர்  பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்றும், வலிமையான தலைமையின் கீழ் நாடு இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நிமிடத்திற்கு நிமிடம் மாறுவது தான் திமுக என்றும், பிரதமரை நிர்ணயிக்காத தலையில்லா உடம்பு போன்ற கூட்டணி திமுக கூட்டணி எனவும் கடுமையாக விமர்சித்தார். அதிமுக கூட்டணிக்கு மக்கள் நலம்தான் தலையாய நோக்கம் எனத் தெரிவித்த அவர், உழைப்பால் உயர்ந்த கட்சிகளுடன் தாங்கள் கூட்டணி அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :