நாடு முழுவதும் ஒரே மாதிரியான 112 அவசர உதவி எண் சேவையின் கீழ் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன.

Home

shadow


        நாடு முழுவதும் ஒரே மாதிரியான 112 அவசர உதவி எண்  சேவையின் கீழ் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன.

காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அவசர சேவைகளுக்கு நமது நாட்டில் தனி தனி சேவை எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அயல் நாடுகளில் இருப்பது போன்று இந்தியாவிலும் அனைத்து விதமான அவசர உதவிகளுக்கும் 112 எனும் அவசர உதவி எண் சேவையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால்  அனைத்து மாநிலங்களிலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் எழுந்தன. இதனை அடுத்து முதல் கட்டமாக, இமாச்சல பிரதேசம், ஆந்திரா, உத்தரகண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலுங்கானா, தமிழ் நாடு, குஜராத், ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து உள்ளிட்ட, 20 மாநிலங்கள், இந்ததிட்டத்தில் இணைந்து உள்ளன. அதேபோல், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும், இந்த திட்டத் தில் இணைந்துள்ளன.மேலும் மொபைல் போன்களில், 112 என்ற எண் உள்ள, தனி, 'பட்டன்' வசதியை ஏற்படுத்தும்படி, சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சாதாரண மொபைல் போன்கள் வைத்திருப்போர், 5 அல்லது 6 ஆகிய எண்களை, தொடர்ந்து அழுத்துவதன் மூலம்,அவசர கால உதவியை பெற முடியும்

இது தொடர்பான செய்திகள் :