நீலகிரி ஸ்ரீதந்திமாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்து முஸ்லிம் கிருஸ்துவ மன்றத்தார்களின் 45 வது வருட பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி

Home

shadow

                     நீலகிரி மாவட்டன் குன்னூரில் ஸ்ரீதந்திமாரியம்மன் கோவில் திருவிழாவில் 100க்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்து கொண்ட பூகுண்டம் இறங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள ஸ்ரீதந்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது .தமிழகத்திலேயே ஒரு மாதம் திருவிழா நடைப்பெறும் கோவில் இதுவாகும். இந்த திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக இந்து முஸ்லிம் கிருஸ்துவ இளைஞர் நற்பணி மன்றத்தார்களின்  45 வது வருட பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் 100க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்பக்தர்கள் பூகுண்டத்தில் இறங்கினார்கள்பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இரவு 7.30 மணியளவில் தொடங்கி தொடர்ந்து இரவு 10 மணிவரை நடைப்பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :