புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு கடத்த முயன்ற 490 மதுபாட்டில் பறிமுதல்

Home

shadow

                                                               மக்களவை தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு கடத்த முயன்ற 490 மதுபாட்டில்களை உருளையன்பேட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே  கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்களார்களுக்கு பணப்பட்டுவாடா  செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று போலீஸார் புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அந்தோணியார் கோயில் பேருந்து  நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட  இருசக்கர வாகனங்களை உருளையன்பேட்டை காவல் நிலைய போலீசார் சோதனையிட்டனர். அதில் 490 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் தமிழகத்திற்கு சட்ட விரோதமாக  கடத்தவிருப்பது தெரியவந்தது.  இதனை  அடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :