மேலூர் அருகே நூறாண்டுகள் பழமையான திரௌபதியம்மன் பூக்குழி திருவிழா

Home

shadow

                                    மேலூர் அருகே நூறாண்டுகள் பழமையான திரௌபதியம்மன் பூக்குழி திருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள நூறாண்டுகளுக்கு மேல் பழமையான அருள்மிகு திரௌபதியம்மன் பூக்குழி திருவிழா இன்று நடைபெற்றது இதில் நூறு டன்னுக்கும் அதிகமான எடையிலான பச்சை விறகுகளில், தீ மூட்டப்பட்டு தீக்குண்டம் தயார் செய்யப்பட்டது. 18-நாட்கள் காப்புகட்டி,விரதமிருந்த மருளாளிகள்  எனப்படும் பகதர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் தீயில் இறங்கும் இந்த திருவிழாவில் பெண்கள் பானக பானைகளை சுமந்து வந்தனர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நேர்த்திக்கடனாக மக்கள் பச்சை விறகுகளை கால்நடையாக சுமந்து வந்து காணிக்கையாக செலுத்துவது

குறிப்பிடத்தக்கது...

இது தொடர்பான செய்திகள் :