வேலூர் லத்தேரி அருகே 2 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்

Home

shadow

           வேலூர் லத்தேரி அருகே 2 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே ஒரு வீட்டில் செம்மரங்கள் லாரியிலிருந்து இறக்கி பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக லத்தேரி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் லத்தேரி காவல்துறையினர், கரசமங்கலத்திலுள்ள அமானுல்லா என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு செம்மரங்கள் இறக்கிகொண்டிருந்ததை பார்த்தனர். இதையடுத்து, சுமார் 2 டன் செம்மரரங்களுடன் லாரி மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லத்தேரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அமானுல்லா உட்பட 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செம்மரங்கள் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :