அஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம் – சுவரொட்டியால் பரபரப்பு

Home

shadow

           அஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம் – சுவரொட்டியால் பரபரப்பு

          அஇஅதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு நிலவியுள்ளது.

          அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

         இந்நிலையில், அஇஅதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க எடப்பாடிக்கு அழைப்பு விடுத்து கொளத்தூரை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

         அஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பிய  ரத்தினசபாபதி, கலைச் செல்வன், பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களுக்கு  நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இது தொடர்பான செய்திகள் :