அத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

Home

shadow

                    அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும்  சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அத்திவரதர் விசயத்தில் எவ்வித ஆகம விதிகளும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதால், தரிசனத்தை நீட்டிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தென் இந்திய ஹிந்து மகா சபை தலைவர் வசந்தகுமார், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கோயில் ஆகம விதிப்படி 48 நாட்களுக்குப்பிறகு அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், கோயில் மரபு, வழிபாட்டு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே அத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான செய்திகள் :