அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

Home

shadow

                                 போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

1998-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகனூரில், நடைபெற்ற போராட்டத்தின் போது, பேருந்துகள் மீது கல் வீசி தாக்கிய வழக்கில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, தனக்குவழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 14-ஆம்தேதிமேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி வினித்சரண் அறையில் பிப்ரவரி 4-ஆம்தேதி நடைபெற்றது. அப்போது, விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை மட்டும் நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :