அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது உச்ச நீதிமன்றம்

Home

shadow

                                                                               அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்  நடைபெறவுள்ள  மக்களவைத் தேர்தல்,  இடைத்தேர்தல் ஆகியவற்றில் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து, பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அமமுக கட்சி பதிவு செய்யப்படாததால் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் வரும் தேர்தலில் டிடிவி  தினகரன் கட்சியினர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனும் கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :