அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது

Home

shadow

                     மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடபட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் அமமுக கட்சி தனித்து போட்டியிடுகின்றது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்அதில், வேலூரில் கே.பாண்டுரங்கன் , கிருஷ்ணகிரியில் கணேசகுமார் ,தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் , வடசென்னையில் பி.சந்தான கிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். அரக்கோணத்தில் என்.ஜி.பார்த்திபன் போட்டியிடுகிறார். தருமபுரியில் பி.பழனியப்பன் திண்டுக்கல்லில் ஜோதி முருகன், விருதுநகரில் பரமசிவன் ஐயப்பன் , திருவண்ணாமலையில் .ஞானசேகர் போட்டியிடுகின்றனர். ஆரணியில் செந்தமிழன், கள்ளக்குறிச்சியில் கோமுகி மணியன் , கடலூரில் கே.ஆர்.கார்த்திக் , தூத்துக்குடியில் .புவனேஷ்வரன் போட்டியிடுகின்றனர்.கன்னியாகுமரியில் லெட்சுமணன் போட்டியிடுகிறார். இடைத்தேர்தல் தொகுதிகளை பொருத்த மட்டில் சோளிங்கரில் டி.ஜி மணியும் பாப்பிரெட்டிபட்டியில் டி.கே.ராஜேந்திரனும் நிலக்கோட்டையில் ஆர்.தங்கதுரையும் போட்டியிடுகின்றனர். திருவாரூரில் எஸ்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் எம்.ரெங்கசாமி, ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆர்.ஜெயக்குமார் பெரியகுளம் தொகுதியில் கதிர்காமுவும், விளாத்திகுளம் தொகுதியில் டாக்டர் கே.ஜோதிமணியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி தட்டாஞ்டாவடி சட்டமன்ற இடைத் தேர்தலில் .முருகசாமி போட்டியிடுகிறார்.

இது தொடர்பான செய்திகள் :