அரியலூரில் புதிதாக 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த அரசு சிமெண்ட் ஆலையில் தீ விபத்து

Home

shadow

      அரியலூரில்  புதிதாக 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த அரசு சிமெண்ட் ஆலையில் எற்பட்ட தீ விபத்தால், ஆலை பெரும் சேதம் அடைந்துள்ளது.


அரியலூர் அருகே  அரசுக்கு சொந்தமான  சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலையின் வளாகத்தில் சுமார் 700 கோடி மதிப்பில் புதிதாக பிளான்ட் அமைக்கப்பட்டு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இதில் சோதனை ஓட்டம் நடைபெற்ற போது சிமெண்ட் தயாரிக்க முக்கிய மூலக்கூறான சுண்ணாம்பு கற்கலை கொண்டு செல்லும் கண்வேயர் பெல்டில் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ மளமளவென பரவியதுஆலையின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரியலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி  அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :