அவுரங்கசீப் மன்னராக முடிசூடினார்

Home

shadow

1659 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13-ஆம் நாள் தேதி Aurangzeb மன்னராக முடிசூடப்பட்டார். 1618 ஆம் ஆண்டு Shah Jahan மற்றும் Mumtaz Mahal-இன் ஆறாவது குழந்தையாக பிறந்தார் அவுரங்கசீப். 1636ஆம் ஆண்டு டெக்கான் பகுதியின் வைஸ்ராய்-யாக நியமிக்கப்பட்டார். 1657 ஆம் ஆண்டு ஷாஜகானின் உடல் நிலை மோசமடைந்தது. அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. அவுரங்கசிப் தனது மூத்த சகோதரர்  Dara Shukoh-வுடன் போரிட்டு ஆட்சியை பிடிக்க முடிவு செய்தார். அவுரங்கசிப் ஆக்ராவை கைப்பற்றினார். அதன் பின் டெல்லி விரைந்தது அவுரங்க்சீபின் படை. Dara Shukoh படுதோல்வியடைந்து சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். டெல்லியை கைப்பற்றியவுடனேயே ஷாஜகானை சிறைபிடித்தார். தனது மற்ற இரு சகோதரர்களான ஷுஜாவையும் முராதையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீராக முடிசூட்டிக்கொண்டார். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில்இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமரிசனத்திற்கு உட்பட்டது இந்தியாவை ஒருங்கிணைத்து, ஆட்சி செய்த பேரரசர் என்ற பெருமையை பெற்றார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.


இது தொடர்பான செய்திகள் :