ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது

Home

shadow

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சர்வதேச காரணங்களால் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று காலை வர்த்தகத்தின்போது, ஆபரண தங்கத்தின் விலை, சரவன் ஒன்றுக்கு 264 ரூபாய் அதிரித்து 27 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து 44 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் 584 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்ததால் முதலீட்டாளர்கள் கூடுதல் ஆதாயம் தரும் தங்க முதலீட்டை விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :